மயிலாடுதுறை: தருமபுரம் பகுதியில் உள்ள தோட்டத்தில், அடையாளம் தெரியாத சிலர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர், ஆயுதங்களுடன் இருந்த 16 பேரை சுற்றி வளைத்தனர்.
காவலர்களை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓடிய 16 பேரில் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மயிலாடுதுறையில் கடந்த ஆகஸ்ட் 17 -ஆம் தேதி இரவு முன்விரோதம் காரணமாக வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தவர்களை பழி வாங்குவதற்காக அவரது ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது.