மயிலாடுதுறை முதலாவது புதுத்தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். கடந்த 10 ஆண்டுகளாக மஸ்கட்டில் வேலை பார்த்துவந்த இவர், கடந்த வாரம் மஸ்கட்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு 24ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் 29ஆம் தேதி உயிரிழந்ததாக கம்பெனி நிர்வாகத்தினர் மயிலாடுதுறையில் உள்ள கணேஷின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், கரோனா பாதிப்பால் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரத்தையும் தராத நிலையில், தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்நிறுவனத்திலிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் உயிரிழந்ததாகக் கூறப்படும் கணேஷின் மனைவி கல்பனா மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். முருகதாஸிடம் நேற்று (மே 1) கோரிக்கை மனு அளித்தார்.