தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் பெண்கள் - Seedling planting

குத்தாலம் அருகே வைகல் கிராமத்தில் நடவு பணிக்கு சென்ற பெண்கள் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் நாட்டுப்புறப்பாடல் பாடி நடவு நட்டு வைத்து சென்றனர்.

பாடிக்கொண்டே நாற்று நடும் பெண்கள்
சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாட்டுப்புறப் பாடல்

By

Published : Oct 22, 2021, 9:49 PM IST

மயிலாடுதுறை: குத்தாலம் வட்டம், கோனேரிராஜபுரம் ஊராட்சியின் வைகல் கிராமத்தில் உள்ள சாலை கடந்த 11 வருடங்களாக சாலை சீர்செய்யப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. மழைபெய்தால் சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது.

கோரிக்கை

இந்த சாலையைச் செப்பனிடக்கோரி அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் சாலையை சீரமைக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். சாலையை செப்பனிடாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

வயல் போல் சாலை

இந்நிலையில் இன்று வைகல் கிராமத்தில் வெங்கட்ராமன் என்பவரது வயலில் சம்பா நடவு செய்வதற்கு வெளியூரிலிருந்து வேலைக்காக வந்த பெண்கள், சாலை மிக மோசமாக இருக்கிறது. பார்ப்பதற்கு வயல்போல சாலை உள்ளதாக கூறினர்.

குத்தாலம் அருகே வைகல் கிராமத்தில் 11 ஆண்டுகளாக சரிசெய்யப்படாத சாலையில்

மேலும், நடவடிக்கை எடுக்காத அரசு அலுவலர்களுக்கு உணர்த்தும் விதமாக சேறும், சகதியுமாக உள்ள சாலையில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி நாற்றுகளை நடவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: உலகம் போற்றும் செம்மொழியின் அடுத்தகட்ட நகர்வு - புதிய விசைப்பலகை, ஒருங்குறி மாற்றி அறிமுகம்!

ABOUT THE AUTHOR

...view details