தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - வரதட்சணை காரணமா?

மயிலாடுதுறையில் திருமணமான நான்கு மாதங்களில் இளம்பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

By

Published : Aug 8, 2021, 11:50 AM IST

மயிலாடுதுறை: முடிகண்டநல்லூரைச் சேர்ந்த முருகன் (27). இவருக்கும், குத்தாலத்தைச் சேர்ந்த மணி என்பவரது மகள் மதுபாலா (24) என்பவருக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முருகன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி மணி தனது மகள் மதுபாலாவிடம் பேசுவதற்காக தொலைபேசியில் அழைத்துள்ளார். பலமுறை அழைத்தும் மதுபாலா அழைப்பை எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த மணி முடிகண்டநல்லூருக்குச் சென்றார்.

இளம்பெண் தற்கொலை

அங்கு, மதுபாலா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து மணி உடனடியாக மணல்மேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மதுபாலாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை தீர்வல்ல

இந்நிலையில், தற்போது மணி, தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மதுபாலாவிற்கு திருமணமாகி நான்கு மாதங்கள் மட்டுமே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் மயிலாடுதுறை ஆர்.டி.ஓ. பாலாஜி தனி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: ஐஏஎஸ் நுழைவுத் தேர்வில் தோல்வி: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details