சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தபோது அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1228 மதுபான பாட்டில்கள் இருந்துள்ளன. சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மதுபானங்கள் காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மதுபானங்கள் பறிமுதல் - arrest
நாகப்பட்டினம்: சீர்காழி அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மதுபானங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
1 லட்ச மதிப்பிலான காரைக்கால் மதுபாட்டில்கள் பறிமுதல்
மதுபானங்களை கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநரை கைதுசெய்து சீர்காழி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோன்று விலை குறைவான மதுபானங்களை திருட்டுத்தனமாக கடத்திவந்து நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை நடத்திவருகின்றனர். இதனை காவல்துறையினர் முறையாக கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.