மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், நாகை அடுத்துள்ள பனங்குடி கிராமத்தில் பாஜகவின் விவசாய அணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 15) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு பயனுள்ள வேளாண் சட்டம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும், வேளாண் சட்டத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்க கூடிய பலனை ஒவ்வொரு விவசாயிகளின் வீடுகளுக்கும் கொண்டு சேர்ப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.