மழை, வெள்ளம் காலங்களில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கிடவும், சீர்காழி சட்டப்பேரவை தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நெய்தல் பேரிடர் மீட்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக பிரத்யேகமாக இரண்டு படகுகளையும், நன்கு பயிற்சி பெற்ற மீனவர்களை இக்குழுவில் இணைத்து செயல்பட உள்ளனர்.