தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாய நிலத்தில் கொப்பளிக்கும் தண்ணீர்; விவசாயிகள் அச்சம் - மண் பரிசோதனை

விவசாய நிலத்தில் நீர்க்குமிழிகள் போல் வயல் முழுவதும் கொப்பளித்த தண்ணீரால் விவசாய நிலங்களில் செல்லும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று விவசாயிகள் அச்சமடைந்தனர்

விவசாய நிலத்தில் நீர்க்குமிழி போல் கொப்பளிக்கும் தண்ணீர்; விவசாயிகள் அச்சம்
விவசாய நிலத்தில் நீர்க்குமிழி போல் கொப்பளிக்கும் தண்ணீர்; விவசாயிகள் அச்சம்

By

Published : Dec 16, 2022, 12:10 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அன்னவாசல் ஊராட்சி கழனிவாசல் கிராமத்தில் சுதாகர், சரவணன் ஆகியோர் சாகுபடி செய்திருந்த இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்தில் தண்ணீர் இன்று (டிசம்பர் 16) காலை முதல் கொப்பளித்து வருகிறது. சேற்றைக் கொண்டு அடைத்தாலும் நீர்க்குமிழிகள் வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தங்கள் பகுதி விவசாய நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீரில் கொப்பளிப்புகள் ஏற்பட்டு வருகிறதோ என்று விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விவசாய நிலத்தில் நீர்க்குமிழி போல் கொப்பளிக்கும் தண்ணீர்; விவசாயிகள் அச்சம்

இதனிடையே இதுகுறித்து அறிந்த குத்தாலம் கெயில் நிறுவன தலைமை மேலாளர் நரசிம்மன், குத்தாலம் மற்றும் காரைக்கால் கெயில் நிறுவன தொழில்நுட்பக்குழுவினருடன் சம்பவயிடத்துக்கு விரைந்து விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்டனர். எக்ஸ்ப்ளோசிவ் மீட்டர் மூலம் சோதனை செய்து எரிவாயு கசிவு ஏற்படவில்லை என்று உறுதிபடுத்தினர்.

இதையடுத்து விவசாயிகள் அச்சமடைய தேவையில்லை என்று நம்பிக்கை தெரிவித்தனர். அறுவடை முடிந்தவுடன் அந்த பகுதியில் மண் பரிசோதனை செய்து ஆய்வு செய்யப்படும். விவசாயிகளுக்கு எந்த பாதிப்புமில்லை என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில்: தருமபுர ஆதீனம் முன்னிலையில் பாலாலயம்

ABOUT THE AUTHOR

...view details