தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குச் சேகரிக்க வந்த அதிமுக-பாமக நிர்வாகிகளைத் திருப்பி அனுப்பிய கிராமத்தினர்!

நாகப்பட்டினம்: கீழ்வேளூர் தொகுதியில் வாக்குக் கேட்டுச் சென்ற அதிமுக - பாமக நிர்வாகிகளை கிராமத்தின் உள்ளே நுழையவிடாமல் மக்கள் திருப்பி அனுப்பினர்.

admk
admk

By

Published : Apr 4, 2021, 1:22 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதிக்குள்பட்ட திருக்குவளை ஒன்றியம் வடுவூர் கிராம மக்கள் நிரந்தரப் பட்டா, சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு பல ஆண்டுகளாகப் போராடி மனு அளித்துவருகின்றனர். இதனால் சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்க உள்ளதாக இந்த மக்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கச் சென்ற அதிமுக மாவட்டத் துணைச் செயலாளர் மீனா, பாமக மாநில நிர்வாகி வேதா முகுந்தன் உள்ளிட்டோரை அப்பகுதியினர் கிராமத்தில் உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

வேட்பாளர்களைத் திருப்பி அனுப்பிய கிராமத்தினர்

அவர்களுக்கு கறுப்புக் கொடிகளைக் காட்டி எதிர்ப்புத் தெரிவித்த கிராம மக்கள், பல ஆண்டுகளாக நிரந்தரப் பட்டா, சாலை வசதி, குடிநீர் வசதி கேட்டு இதுவரை செய்யாமல் தற்போது வாக்குக் கேட்டு எதற்கு வந்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கிராம மக்களிடம் அதிமுக நிர்வாகிகள் எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வாக்குச் சேகரிக்காமல் புறப்பட்டுச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details