தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் 'விஜய் பயிலகம்' தொடக்கம்! - vijay pailakam in mayiladuthurai

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பயிலகம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வருகைதந்த மாணவ -மாணவிகளுக்கு பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கினர்.

விஜய் மக்கள் இயக்கம்
விஜய் மக்கள் இயக்கம்

By

Published : Jul 15, 2023, 11:02 PM IST

விஜய் மக்கள் இயக்கம்

மயிலாடுதுறை:அரசியலில் கால் பதிப்பதற்கான முன்னெடுப்புகளை நடிகர் விஜய் பலவேறு விதத்தில் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக, அண்மையில் உலக பட்டினி தினத்தன்று அனைத்து தொகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏழை மக்களுக்கு உணவு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று சிறப்பிடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில், சென்னை நீலாங்கரையில் கடந்த ஜூன் மாதம் 17-ஆம் தேதி, நடிகர் விஜய் மாணவர்களைச் சந்தித்துப் பாராட்டு தெரிவித்து, அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கௌரவித்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் பிறந்தநாளன்று அவரது ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தும், ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கியும், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் நடிகர் விஜயின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடினர். மேலும் பல்வேறு கோவில்களில் அபிஷேகங்கள் செய்தும், நடிகர் விஜயின் பெயரில் அர்ச்சனை செய்தும், அன்னதானமும் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும், அனைத்து மாவட்டங்களில் விஜய் பயிலகம் தொடங்கப்படும் என்று விஜய் மக்கள் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாளை விஜய் மக்கள் இயக்கத்தினர் சிறப்பாகக் கொண்டாடினர். பல்வேறு இடங்களில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் படம் மற்றும் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அளித்துக் கொண்டாடினர். தொடர்ந்து மயிலாடுதுறை அருகே ஐவநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சோத்தமங்கலம் கிராமத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் பயிலகம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள் மாணவ மாணவிகளுக்குப் பேனா, பென்சில், ரப்பர் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கி விஜய் பயிலகத்தைத் தொடங்கி வைத்தனர். கல்வி கற்க பயிலகம் வந்த மாணவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். மேலும் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கு மாதா என்பவருக்கு மாதம் ஊதியம் வழங்குவதாகவும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:போஸ்ட் ஆபிஸில் நூதன முறையில் ரூ.1 கோடி மோசடி.. தஞ்சை உடையளூரில் பரபரப்பு!

ABOUT THE AUTHOR

...view details