மயிலாடுதுறை மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான அவசர ஊர்திகளும் கரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், மகப்பேறு, விபத்தில் படுகாயம் அடைந்தோருக்கு இலவச அவசர ஊர்தி வசதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரசவம், விபத்து, மகப்பேறு முடிந்து தாய் சேய் இலவசமாக வீட்டிற்கு அழைத்துச் செல்ல, ஊரடங்கு நாள்களில் இலவசமாக 2 கார்களை பயன்படுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர். விஜய் மக்கள் இயக்க மாவட்டத் தலைவர் குட்டிகோபி தலைமையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் ராஜசேகரிடம் விஜய் ரசிகர்கள் இரண்டு கார்களையும் ஒப்படைத்தனர்.