தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

#BigilVijay விஜய் ரசிகர்கள் செய்த காரியத்தை நீங்களே பாருங்க..! - பிகில் திரைப்படம் வெற்றி

நாகப்பட்டினம்: விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் பிகில் திரைப்படம் வெற்றி பெறவேண்டி அவரது ரசிகர்கள் கோயிலில் மண் சோறு சாப்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

vijay-fans-ate-mansoru

By

Published : Oct 22, 2019, 12:54 PM IST

நடிகர் விஜய்-இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் வெற்றிபெற வேண்டி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அப்போது, விஜய் ரசிகர்கள் பிகில் படம் வெற்றியடைய வேண்டியும், விஜய் நீடுழி வாழ வேண்டியும் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து வடக்கு மாவட்ட தலைவர் குட்டி. கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள், கோயில் வளாகத்தில் தரையில் அமர்ந்து மண்சோறு சாப்பிட்டு, பிரார்த்தனை செய்தனர்.

மண் சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்

இதுகுறித்துப் பேசிய ரசிகர்கள், விஜய் நீடுடி வாழ வேண்டும். மென்மேலும் வளர வேண்டும், பிகில் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

விஜய் ரசிகர்களின் இந்தச் செயல் அங்குள்ள மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் இருப்பார்களா என சிலர் முணுமுணுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க...

உன் படம் 100 நாள் ஓடும்ப்பா..! - பிரபல ஜோதிடர் கணிப்பு

ABOUT THE AUTHOR

...view details