நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கை நல்லூர் சொர்ணபுரீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான பறவை என்ற இடத்தில் பல ஆண்டு காலமாக தினசரி காய்கறிச்சந்தை செயல்பட்டுவந்தது.
இந்தச் சந்தைக்கு வேளாங்கண்ணி, தெற்கு பொய்கை நல்லூர், வடக்கு பொய்கைநல்லூர், விழுந்தமாவடி, காமேஸ்வரம், பிரதாபராமபுரம், நாலுவேதபதி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருள்களை விற்பனை செய்துவந்தனர்.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக அந்தச் சந்தை மூடப்பட்டு கிழக்கு கடற்கரைச் சாலையில் காலியாக இருந்த இடத்தில் தற்காலிகமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் பழைய இடத்திலேயே சந்தை செயல்பட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு தற்காலிக இடத்தை அடைத்தது.