தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்.இ.சி.எல் நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கப்பணிகளை தடுக்க வேண்டும் - பேராசிரியர் ஜெயராமன்

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை பாதிக்கும் எம்.இ.சி.எல் நிறுவனத்தின் திறந்தவெளி சுரங்கப்பணிகளை தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும் என்று மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்தார்.

மத்திய அரசின் திறந்தவெளி சுரங்கம் அமைக்கும் திட்டத்தால் வீராணம் ஏரி அழியும் அபாயம்
மத்திய அரசின் திறந்தவெளி சுரங்கம் அமைக்கும் திட்டத்தால் வீராணம் ஏரி அழியும் அபாயம்

By

Published : Jan 10, 2023, 7:11 AM IST

Updated : Jan 10, 2023, 3:04 PM IST

மத்திய அரசின் திறந்தவெளி சுரங்கம் அமைக்கும் திட்டத்தால் வீராணம் ஏரி அழியும் அபாயம்

மயிலாடுதுறை: மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நேற்று (ஜனவரி 9) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும்.

விவசாய நிலங்களை மொத்தமாக அழித்துவிட்டு வீராணம் பாசன பகுதிகளில் வீராணம் ப்ராஜெக்ட் என்ற பெயரில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான திறந்தவெளி சுரங்கம் அமைக்கும் முதல் கட்ட பணிகளை மத்திய அரசின் மினரல்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன் கன்சல்டன்சி லிமிடெட் நிறுவனம் (எம்.இ.சி.எல்) தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயராமன், "மத்திய அரசின் எம்.இ.சி.எல் நிறுவனம் பாதுகாக்கப்பட்ட மண்டலமான காட்டுமன்னார்கோயில், குமராட்சி, மேலபுவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் முதல் கட்ட ஆய்வு நடத்தியுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட வீராணம் ஏரி முற்றிலும் அழிவதுடன் அதனை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கப்படும். விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்படும். இதனை தடுக்கும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு அரசு வலுவான சட்டம் இயற்றி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: குண்டுமணி மாலைகளை தங்கம் எனக் கூறி ரூ.6 லட்சம் மோசடி!

Last Updated : Jan 10, 2023, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details