தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசிகவினருக்கும் காவல் துறையினருக்குமிடையே கடும் வாக்குவாதம்

நாகப்பட்டினம்: மாணவர்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்க காவல் துறையினர் அனுமதி மறுத்ததால், விசிகவினருக்கும் காவல் துறையினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

By

Published : Aug 2, 2019, 2:23 PM IST

விசிக

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை கோட்டத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

விசிகவினருக்கும் காவல்துறையினருக்குமிடையே கடும் வாக்குவாதம்

அதன் ஒரு பகுதியாக, விசிக சார்பில் மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் மாவட்ட பொறுப்பாளர் ஈழவளவன் தலைமையில் அக்கட்சியினர் மாணவ, மாணவிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் கல்லூரி வாசலில் துண்டுப் பிரசுரங்கள் வழங்க காவல் துறையினரிடம் அனுமதி பெறப்படவில்லை என்று கூறி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதைத் தடுத்து நிறுத்தினர். ஆனால் விசிகவினர் காவல் துறையினரின் தடையை மீறி துண்டுப் பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.

இதனையடுத்து, மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளச்சாமி ஏ.வி.சி. கல்லூரிக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details