மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த வதான்யேஸ்வரர் கோயில் தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமானது. ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கொண்ட இக்கோயிலில் வதான்யேஸ்வரர், ஞானாம்பிகை தனி சன்னதியில் உள்ளனர். விநாயகர், முருகன், துர்க்கை, மேதாதட்சிணாமூர்த்தி உள்ளிட்ட உப சன்னதிகளும் உள்ளன.
மேலும் கஷ்டங்களைப் போக்கும் வரத்தை இத்தலத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. இந்த நிலையில் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து சுவாமி அம்பாள் ஞானாம்பிகை உள்ளிட்ட சுற்றுக் கோயில்கள் ஆகியவற்றில் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பாலஸ்தாபனம் எனப்படும் பாலாலயம் இன்று (டிச.14) காலை நடைபெற்றது.