தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிற சாதி பட்டியலோடு இணைக்க கூடாது - வள்ளுவர் சமூக அமைப்பு மனு - மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாகை: வள்ளுவர் சமூகத்தினரை பிறசாதி பட்டியலோடு இணைக்க கூடாது என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Petition
Petition

By

Published : Oct 12, 2020, 7:36 PM IST

கடந்த மாதம் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நடந்திய காணொலி காட்சி கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் சில சமூக மக்களை ஆதி திராவிடர் என அடையாளப்படுத்த வேண்டும் என்ற பொருளில் பேசியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருடைய பேச்சை சுட்டிக்காட்டி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வள்ளுவர் குல சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர்.

அதில், தாங்கள் திருவள்ளுவர் தோன்றிய வள்ளுவர் இனத்தில் பிறந்ததாகவும், தங்களை அரசியல் அமைப்புகளும், சமூக அமைப்புகளும் ஆதி திராவிடர் என்ற அடையாளத்தில் சேர்க்க முயற்சிப்பதாகவும், எனவே தங்களை எந்தவொரு பட்டியல் சாதியோடும், பிற சாதியோடும் தொடர்புபடுத்தாமல் வள்ளுவர் என்றே சொல்ல வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சாதி பெயரைக் கேட்ட விவகாரம்: எஸ்.பி. அறிக்கை தாக்கல்செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details