தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜகவில் இணைந்த பிரபல பெண் தாதா எழிலரசி கைது! - பெண் தாதா எழிலரசி கைது

நாகை: தனிப்படை காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த பிரபல பெண் தாதா எழிலரசி காரைக்கால் அருகே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தவர்.

lady don ezhilarasi arrested
பெண் தாதா எழிலரசி கைது

By

Published : Mar 17, 2021, 2:02 PM IST

காரைக்காலின் பிரபல தொழிலதிபர் மறைந்த ராமுவின் இரண்டாவது மனைவி எழிலரசி. இவர் ராமுவை கொலை செய்தவர்களை பழி தீர்த்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாகவும், பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டுள்ளார்.

பிரபல பெண் தாதாவாக திகழும் எழிலரசி மீது பல்வேறு வழக்குகள் புதுவை மற்றும் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதாகி சிறை சென்று வெளியே வந்தார்.

ஆறு மாதத்துக்கு முன்பு மதுபான குடோன் உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தலைமறைவாகியிருந்த அவர் மீது காரைக்கால் நீதிமன்றத்தில் 4 பிடிவாரண்ட்கள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், தனிப்படை காவல் துறையினர் தேடி வந்தனர்.

சமீபத்தில் புதுவை பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளராக காரைக்கால் திருப்பட்டினம் தொகுதியில் எழிலரிசி போட்டியிட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் பரப்புரை செய்து வந்தனர்.

இந்தச் சூழலில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதற்காக காரைக்கால் வர இருப்பதாகவும் தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

நாகூர் புறவழி சாலையில் தனது ஆதரவாளர்களுடன் வந்த எழிலரசியை காரைக்கால் தனிப்படை காவல் துறையினர் கைது செய்து, திருப்பட்டினம் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:திருட்டுக்கு பயந்து பறக்கும் படையினரிடம் நகைகளை பறிகொடுத்த குடும்பம்!

ABOUT THE AUTHOR

...view details