தமிழ்நாட்டில் 2021ஆம் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு "விடியலை நோக்கி - ஸ்டாலினின் குரல்" என்ற தேர்தல் பிரச்சார பரப்புரை பயணத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டபோது ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் கூட்டியதாக நேற்று (நவ. 22) மதியம் 3 மணிக்கு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு திமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமணம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து 8 மணி நேரத்துக்கு பின்னர், இரவு சுமார் 11 மணியளவில் ஸ்டாலின் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, உதய்நிதி ஸ்டாலின் 9 மணிக்கு மேலாகியும் விடுவிக்கப்படாததை கண்டித்து திமுக தொண்டார்கள் அவர் அடைத்து வைக்கப்பட்ட திருமண மண்டபத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக அரசு, காவல்துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.