மயிலாடுதுறை: தரங்கம்பாடி, செம்பனார்கோவில் பகுதிகளில் 2020, 2021ஆம் ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. அண்மையில், செம்பனார்கோவில், விளநகரில் சாந்தகுமார் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன.
இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றுவந்தது. அதில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், மயிலாடுதுறை கல்லறை தோப்புத் தெருவைச் சேர்ந்த மருது (எ) விஜயபாஸ்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த சண்முகம் (44) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், செம்பனார்கோவில் பகுதி கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது.