நாகப்பட்டினம் மயிலாடுதுறை அடுத்த சீர்காழி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ஆனந்தஜோதி, அரசு பள்ளி தலைமையாசியர். இவரின் மனைவி சித்ரா (40). இவர் கடந்த வாரம் செப்.18 ஆம் தேதி விடியற்காலை வீட்டின் வாசலில் கோலம் போடுவதற்காக வெளியே வந்துள்ளார். அப்போது அங்குவந்த அடையாளம் தெரியாத நபர்கள், அவர் தலையில் பலமாகத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பலத்த காயமடைந்த சித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து, வழக்குப்பதிவு செய்த சீர்காழி காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, சீர்காழி அருகே சட்டநாதபுரத்தைச் சேர்ந்த ரியாஸ் (26) என்பவரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.