கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, இன்று முதல்(மே.24) தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, நேற்று (மே.23) டாஸ்மாக் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இதன் காரணமாக, மது பிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதைப் பயன்படுத்தி, சீர்காழி தாலுகா முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சீர்காழியில் தனிப்படை காவல் துறையினர் பல்வேறு பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின்போது, சீர்காழி அருகேயுள்ள தாடாளன் கோயில், காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சுமத்திரா (30), மாரிமுத்து (37) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.