தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாவுக்கு வந்த இடத்தில் நேர்ந்த சோகம் ! கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு - sea wave

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த இடத்தில் கடலில் மூழ்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு
கடல் அலையில் சிக்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு

By

Published : Jul 9, 2022, 10:30 PM IST

நாகைமாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேளாங்கண்ணிக்கு விடுமுறை தினத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் இருந்து 15 பேர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கிய அவர்கள் கடலில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆரோக்கிய ஷெரின்(19), ரியானா(13), சஹானா(14) ஆகிய மூவரும் சீற்றத்தின் காரணமாக கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர் மூவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் மூவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இறந்த மூவரின் உடல்களும் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சொத்தை பிரித்தால் தான் இறுதிசடங்கு - கணவனின் இறுதிசடங்கில் பிரச்சனை செய்த மனைவிகள்

ABOUT THE AUTHOR

...view details