தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்

நாகை: வேலைநீக்கம் செய்யப்பட்ட மாடர்ன் ரைஸ் மில் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி மயிலாடுதுறையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

trade-unions-protest-demanding-16th-demands
trade-unions-protest-demanding-16th-demands

By

Published : Mar 5, 2020, 8:32 AM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியிலுள்ள சித்தர்காடு மாடர்ன் ரைஸ்மில் முன்பு டி.என்.சி.எஸ்.சி. தொழிற்சங்கம், சுமைதூக்கும் தொழிற்சங்கத்தினர் சார்பாக எல்.பி.எஃப். மாவட்டச் செயலாளர் நக்கீரன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக மீண்டும் பணி வழங்கக் கோரியும், தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே இயக்க வலியுறுத்தியும், கொள்முதல், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நேரடியாக கூலி வழங்கக் கோருதல் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

16ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தில் தொழிற்சங்கத்தினர் ஆர்பாட்டம்

இதில், எல்.பி.எஃப்.ஐ., என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.சி.சி.டி.யு., பாட்டாளி தொழிற்சங்கம், அம்பேத்கர் பணியாளர் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிங்க:பணி அனுபவச் சான்றிதழ் வழங்க கையூட்டு கேட்கும் கல்வி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!

ABOUT THE AUTHOR

...view details