தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்! - summer

கோடை விடுமுறையை கொண்டாட வரலாற்று சிறப்புமிக்க தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்

தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

By

Published : May 16, 2022, 7:50 AM IST

மயிலாடுதுறை : கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக சுற்றுலாத்தலங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வு பிறகும் பள்ளி கல்லூரி கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தளங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை அருகே உலக புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை உள்ளது. இக்கோட்டை வரலாற்று சின்னமாகவும், சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. இந்த சுற்றுலா மையத்திற்கு நாள்தோறும் வெளிமாநிலம் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர்.

தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு தரங்கம்பாடி கடற்கரையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினரோடு குவிந்து உள்ளனர். குழந்தைகள் கடற்கரையில் விளையாடி, கடலில் குளித்தும் மகிழ்ந்தனர். குறிப்பாக வெளி மாவட்ட, வெளிமாநில சுற்றுலா பயணிகளும் கடற்கரையில் குடும்பத்தினருடன் வந்து செல்வதால் சுற்றுலாதலம் களைகட்டியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கூட்டம் அதிகமாக வரத்தொடங்கியதால் தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ஆழம் அதிகமாக இருப்பதால் கடலில் குளிக்க கூடாது என எச்சரிக்கை பதாகை வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டும் சுற்றுலாப் பயணிகள்

ABOUT THE AUTHOR

...view details