மயிலாடுதுறை: சோழம்பேட்டை கிராமத்தில் கார்த்தி என்பவரது வீட்டின் பின்புறத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலான பழமையான வேப்பமரம் அமைந்துள்ளது. சுமார் பத்து அடி உயரமுள்ள இந்த வேப்ப மரத்தில் இன்று காலை திடீரென பால் வடிந்துள்ளது.
மரத்தின் உச்சியில் இருந்து பால் வடிந்த காட்சிகளை அப்பகுதி பொதுமக்கள் பக்திப் பரவசத்துடன் பார்க்க குவிந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் ஒன்றிணைந்து வேப்ப மரத்திற்கு குங்குமம், மஞ்சள் பூசி பூக்களிட்டு தீபாராதனை செய்தனர். பின்னர் கிராம மக்கள் படையெடுத்துச்சென்று வேப்ப மரத்தினை ஆச்சரியமுடன் பார்த்து வழிபட்டு வருகின்றனர்.