நிவாரணப்பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற ஊழியர்கள்- முற்றுகையிட்ட பொதுமக்கள்
நாகை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணப் பொருட்களை அலுவலர்களின் அனுமதியின்றி எடுத்துச் செல்ல முயற்சித்த ஊழியர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Gaja relief materials taken by officials creates a probe in nagai
நாகையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எண்ணெய், பருப்பு, அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை அலுவலர்களின் அனுமதியின்றி நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் வாகனங்களில் எடுத்துச் செல்ல முயற்சித்தனர். அப்போது பொருட்களை எடுத்துச் செல்ல விடாமல் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.