இரண்டாம் கட்டமாக தமிழ்நாட்டில் 38 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. தேர்தலை முன்னிட்டு ஜனநாயக கடமை ஆற்ற பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள் மற்றும் புது வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
புது கட்சிகளுக்கே ஆதரவு - மனம் திறந்த இளம் வாக்காளர்கள்
நாகை: மயிலாடுதுறை தொகுதியில் வாக்களித்த இளம் வாக்காளர்கள் புது கட்சிகளை ஆதரித்து வாக்களித்துள்ளோம் என தெரிவித்துள்ளதால் பிகதான கட்சிகள் தோல்வி பயத்தில் உள்ளன.
இந்நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை தொகுதி மக்களவைத் தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்ற இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும், இதுகுறித்து பேசிய இளம் வாக்காளர்கள், இந்த மக்களவைத் தேர்தலில் பழைய கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. புதிய கட்சிகளை வரவேற்று வாக்களித்துள்ளோம். காரணம் புதிய கட்சிகளை சேர்ந்தவர்கள் மிக திறமையாகவும் தமிழ் மக்களுக்கு நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வாக்களித்தோம் என தெரிவித்துள்ளனர்.
தற்போதைய சூழலில் வாக்களிக்க மறுக்கும் வாக்காளர்கள் மத்தியில் தனது வாக்கை பதிவு செய்து, தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிய இளைஞர்கள் செயல் வரவேற்கத்தக்கதாகும்.