தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பலத்த பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்! - polling machine

மயிலாடுதுறை: 1,073 வாக்குச்சாவடி மையங்களுக்கு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள்
வாக்குப்பதிவு இயந்திரங்கள்

By

Published : Apr 5, 2021, 9:00 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய 2 பொது தொகுதிகளும், சீர்காழி தனி தொகுதியாகவும் உள்ளது.

தொடர்ந்து மாவட்டத்தில் 7 லட்சத்து 72 ஆயிரத்து 383 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வாக்களிக்க ஏதுவாக 88 மண்டலங்களில் 1073 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 53 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில் 1073 வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வேனில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் 342 வாக்குச்சாவடி மையங்களுக்கு கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் சுகாதாரத் துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:17 அஞ்சல் வாக்குகளை வாக்குப் பெட்டியில் போடவந்த காங். பிரமுகர் கைது!

ABOUT THE AUTHOR

...view details