1930ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி உப்பு சத்தியாகிரகம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்ற நாகை மாவட்டம் வேதாரண்யம் இடத்தில் நினைவு ஸ்துாபி அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் ஏப்ரல் 30ஆம் தேதி தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.
வேதாரண்யத்தில் உலக பூரண மதுவிலக்குக் கோரி தியாகிகள் உண்ணாவிரதம் - vedharenyam
நாகை: உப்பு சத்தியாகிரக 89ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வேதாரண்யத்தில் உள்ள நினைவு வளாகத்தில் தியாகிகள் உலக பூரண மதுவிலக்குக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
martyrs-fasting
இந்நிலையில்,, உப்பு சத்தியாகிரக 89ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ஸ்தூபியில் அஞ்சலி செலுத்த திருச்சியிலிருந்து யாத்திரை வந்தனர். அப்போது, உப்புசத்தியாகிரக தண்டி யாத்திரை கமிட்டி பொதுச் செயலாளர் சக்தி செல்வகணபதி தலைமையில், காந்தியின் அறக்கட்டளையினர் உப்பு சத்தியாகிரக நினைவு வளாகத்தில் உலக அமைதிக்காகவும், பூரண மதுவிலக்குக் கோரியும் தியாகிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.