தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத்திறனாளி கூட்டு பாலியல் வன்கொடுமை-மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். - joint

நாகை: காதலிக்கு (மாற்றுத்திறனாளி) மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாற்றுத்திறனாளி கூட்டு பாலியல் பலாத்காரம்-ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

By

Published : Jul 13, 2019, 4:09 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை திருவிழந்தூர் அருகே வசிப்பவர் காமாட்சி வயது (20). இவர் மாற்றுத்திறனாளி ஆவார். காமாட்சியும் திருவிழந்தூர் அருகே உள்ள கழுக்காணி முட்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரும் இவரும் கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறி சென்ற காமாட்சி. திருவிழந்தூர் அருகே முட்புதரில் கிழிந்த ஆடையில் காயங்களுடன் மயக்கநிலையில் இருந்துள்ளார். அதனையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் காமாட்சியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர். காமாட்சியின் காதலன் அலெக்சாண்டரை விசாரித்ததில் அவரும் அவரின் நண்பர்களும் காமாட்சிக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

மாற்றுத்திறனாளி கூட்டு பாலியல் பலாத்காரம்-ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


அலெக்சாண்டரின் மீது வழக்குப்பதிவு செய்து அவரின் நண்பர்களை காவல்துறையினர் தேடிவரும் நிலையில், அம்மாவட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரும் மற்றும் காமாட்சியின் உறவினர்களும் காவல்துறையினர் உரிய விசாரணை செய்யாமல் தற்போது வரை அலெக்சாண்டரின் நண்பர்களை கைது செய்யவில்லை எனவும் உடனடியாக அவர்களை கைது செய்யவேண்டும் எனவும் கூறி பேரணியாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும் எனவும் கூறி இறுதியில் கோரிக்கை மனுவை கோட்டாசியர் அலுவலகத்தில் அளித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details