நாகையை அடுத்த பொரவச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். இவர் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், சொந்த வேலை காரணமாக சிக்கல் பகுதியில் இருந்து தனது வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவரை, வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள், இரும்புக் கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் .