தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வாக்களிக்கும் ஆர்வத்தை குறைக்கும் தேர்தல் அலுவலர்கள்...!' - திமுக வேட்பாளர் ராமலிங்கம் குற்றம்  சாட்டினார்.

நாகப்பட்டினம்: வாக்களிக்கும் ஆர்வத்தை பொதுமக்களிடம் குறைக்கும் விதமாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுவதாக மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.

மயிலாடுதுறை

By

Published : Apr 18, 2019, 3:01 PM IST

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறையில் மக்கள் வாக்களிக்கும் ஆர்வத்தை குறைக்கும் விதமாக தேர்தல் அலுவலர்கள் செயல்படுகின்றனர் என மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.

இது குறித்து ராமலிங்கம் பேசுகையில், 'கும்பகோணம், திருவிடைமருதூர், மயிலாடுதுறை உட்பட பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கோளாறு காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்குவது கால தாமதம் ஏற்பட்டது.

இதனால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். கும்பகோணம் 95, 104 ஆகிய வாக்குச்சாவடிகளில் ஒன்றரை மணி நேரம் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. இயந்திர கோளாறு சரி செய்கிறோம், மாற்று ஏற்பாடு செய்கிறோம் என்று தேர்தல் அலுவலர்கள் அலைக்கழிக்கின்றனர். வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு போதுமான பயிற்சியளிக்கவில்லை. மேலும், வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க தேர்தல் அலுவலர்களிடம் கோரிக்கை வைத்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.

திமுக வேட்பாளர் ராமலிங்கம் செய்தியாளர் சந்திப்பு

ABOUT THE AUTHOR

...view details