தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அழுகிய நிலையில் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை! - சடலம் மீட்பு

நாகை:மூன்று நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜ்குமார் சடலம்

By

Published : Mar 17, 2019, 8:15 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், வெளிப்பாளையம் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (45). இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர் தனது தாய் தந்தையுடன் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ராஜ்குமார் வீட்டின் அருகில் இருந்து இன்று காலை முதல் துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ராஜ்குமார் சடலம்

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெளிப்பாளையம் காவல்துறையினர் வீட்டின் பின்புறம் ராஜ்குமார் இறந்து அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதை கண்டறிந்தனர். இதனைத்தொடர்ந்து, அழுகிய நிலையில் கிடந்த ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், ராஜ்குமார் தனது வயதான தாய், தந்தையருடன் அந்த வீட்டில் வசித்து வந்ததும், இவருக்கு திருமணம் ஆகிய நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இவர் குடிநோயாளியாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், ராஜ்குமார் சடலத்தில் துர்நாற்றம் வீசியதால் மூன்று தினங்களுக்கு முன்பு அவர் இறந்து இருக்கலாம் என்று வெளிப்பாளையம் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனிடையே, மூன்று நாட்களாக அழுகிய நிலையில் கிடந்த சடலம் மீட்கப்பட்டதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details