நாகை மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், ஆலோசனைக் கூட்டம் இன்று(மே.07) நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், ”நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,414 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 935 கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமையில் இருக்கின்றனர். மேலும் அரசு மருத்துவமனைகளில் நான்கு நாள்களுக்குத் தேவையான ஆக்சிஜன் செறிவூட்டிகள் கையிருப்பு உள்ளது” என்றார்.