நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள வாணாதிராஜபுரத்தைச் சேர்ந்த 16 பேர், கடந்த மார்ச் மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கூலி வேலையான டென்ட் அமைக்கும் பணிக்குச் சென்றுள்ளனர். பின் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சொந்த ஊர் திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வருவதாகவும், தங்களை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்துவர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வாட்ஸ்அப் காணொலி வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கக் கோரிக்கை!
நாகை: பெங்களூருவில் சிக்கித் தவிக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 16 கூலித் தொழிலாளர்கள், தங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல தமிழ்நாடு அரசுக்கு வாட்ஸ்அப் மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெங்களூருவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க கோரிக்கை!
இதனிடையே தற்போது ஏழு பேர் பெங்களூருவிலிருந்து ஒரு வாடகை வாகனத்தில் ஓசூர் வரை வந்து கொண்டிருப்பதாகவும், ஓசூர் வந்த பிறகு சொந்த ஊருக்கு எப்படி செல்வது என்று தெரியவில்லை என்றும்; தங்களையும், பெங்களூருவில் உள்ள சக தொழிலாளிகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். மேலும் 70944 01471 என்ற செல்போன் நம்பரையும் வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க...'இரண்டு மாசம் சம்பளம் கொடுத்தோம்... இப்போ முடியல' - கைவிரித்த இண்டிகோ
TAGGED:
Nagai News