தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாயூரநாதர் ஆலயத்தில் திருக்கல்யாணம்- பக்தர்கள் பங்கேற்பு - திருக்கல்யாணம்

துலா உற்சவத்தை முன்னிட்டு திருவாடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான மாயூரநாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாணம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Mayuranathar Temple
Mayuranathar Temple

By

Published : Nov 14, 2021, 5:22 PM IST

மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் ஆலயத்தில் காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான மாயூரநாதர் அபயாம்பிகை திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்தினார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் ஆலயம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த ஆலயமாகும்.

இந்தத் தலத்தில் துலா கட்ட காவிரிக்கரையில் புனித நீராடி அம்பாள் மயிலாக இறைவனை பூஜித்ததாக வரலாறு. காவிரியில் ஐப்பசி மாதம், கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக ஐதீகம். இதனை முன்னிட்டு, ஐப்பசி மாதம் 10 நாள்களும் மயிலாடுதுறையில் அமைந்துள்ள அனைத்து ஆலயங்களின் சுவாமி, அம்பாள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான துலா உற்சவம் மாயூரநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், படித்துறை விஸ்வநாதர் ஆலயம், அய்யாரப்பர் ஆலயம், காசி விஸ்நாதர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று (நவ.13) நடைபெற்றது.

மாயூரநாதர் - அவையாம்பாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மாயூரநாதர், அவையாம்பிகையுடன், வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, பெண்கள் சீர் வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிவாச்சாரியார், வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த வைபவத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க : பழனி முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details