தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகப்பிரசித்தி பெற்ற துலா உற்சவம் இன்று தொடக்கம் - மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் உலகப்பிரசித்தி பெற்ற துலா உற்சவம் இன்று(அக்.18) தொடங்குகிறது.

உலகப்பிரசித்தி பெற்ற துலா உற்சவம் இன்று தொடக்கம்
உலகப்பிரசித்தி பெற்ற துலா உற்சவம் இன்று தொடக்கம்

By

Published : Oct 18, 2022, 9:48 AM IST

மயிலாடுதுறையில் உலக பிரசித்தி பெற்ற துலா உற்சவம் இன்று(அக்.18) தொடங்குகிறது. பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்தித்ததாகவும், கங்கையை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமான் வரம் அளித்ததாகவும், அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாக ஐதீகம்.

உலகப்பிரசித்தி பெற்ற துலா உற்சவம் இன்று தொடக்கம்

இன்று ஐப்பசி மாதம் தொடங்குவதையொட்டி இம்மாதம் முப்பது நாட்களும் மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து கோயில்களில் இருந்தும் சுவாமி புறப்பாடு நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவிரி துலாக் கட்டத்திற்கு வந்து புனித நீராடி வருகின்றனர். இன்று மதியம் காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல்

ABOUT THE AUTHOR

...view details