தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துலா உற்சவத்தின் காவிரி கடைமுக தீர்த்தவாரி திருவிழா கோலாகலம்..! - thula urchava theerthawari festival

நாகப்பட்டினம்: துலா உற்சவத்தின் காவிரி கடைமுக தீர்த்தவாரி, திருவிழா தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்.

காவிரி கடைமுக தீர்த்தவாரி திருவிழா

By

Published : Nov 17, 2019, 3:26 AM IST

நாகை மாவடட்ம் மயிலாடுதுறையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் நீராடி தங்கள் பாவத்தைப் போக்கிக் கொண்டதாக ஐதீகம். இந்த விழா மயூரநாதர் ஆலயம், பரிமளரெங்கநாதர் ஆலயம், வதான்யேஸ்வரர் ஆலயம், விசுவநாதர் ஆலயம், ஐயாரப்பர் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் இம்மாதம் 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது. இதை முன்னிட்டு மயிலாடுதுறையில் மாயூரநாதர் கோயில், வதான்யேஸ்வரர் கோயில், ஐயாரப்பர் கோயில், விசுவநாதர் கோயில் ஆகிய சிவாலயங்களிலும், பஞ்சமூர்த்திகளுடன், சுவாமி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரிக்கரைக்கு எழுந்தருளினார்.

துலா உற்சவத்தின் காவிரி கடைமுக தீர்த்தவாரி திருவிழா கோலாகலம்

அப்போது அஸ்திரதேவருக்குப் பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவியம் உள்ளிட்ட பொருட்களைக்கொண்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அனைத்து ஆலயங்களின் அஸ்திரதேவரை, காவிரியில் புனித நீராட்டி ஒரே நேரத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. துலா உற்சவ தீர்த்தவாரியை முன்னிட்டு, காவிரி துலா கட்ட காவிரியில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

ABOUT THE AUTHOR

...view details