தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 20, 2021, 7:33 AM IST

ETV Bharat / state

போக்சோ வழக்கைத் திரும்பப்பெற வலியுறுத்தி வீட்டிற்குத் தீவைத்த மூவர்

சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பதிவுசெய்யப்பட்ட போக்சோ வழக்கைத் திரும்பப்பெற பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு மயிலாடுதுறையைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மிரட்டல் விடுத்து, வீட்டிற்குத் தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mayiladuthurai district news
போக்சோ வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தி வீட்டிற்கு தீ வைத்த மூவர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதநிலையில், 15 வயது சிறுமியிடம் குளிச்சார் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் விமல்ராஜ் (21), ஜான்சேகரன் மகன் சாலமன் (31), காமராஜ் மகன் கலைவாணன் (22) ஆகிய மூவரும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

உடனே சுதாரித்து தற்காப்புக்காக தன் கையை தானே அறுத்துக்கொண்டு சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, அம்மூவரும் தப்பியோடினர். இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இளைஞர்கள் மூவரையும் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

46 நாள்களுக்குப் பின்பு கடந்தவாரம் பிணையில் வந்த மூவரும், சிறுமியின் பெற்றோரிடம் வழக்கைத் திரும்பப் பெறுமாறு மிரட்டல்விடுத்துள்ளனர். அதற்கு உடன்பட மறுத்ததால், வீட்டில் யாரும் இல்லாத சூழலில், குற்றவாளிகள் மூவரும் தங்களது வீட்டிற்குத் தீவைத்ததகாவும், அதில், சிறுமியின் திருமணத்திற்குச் சேமித்துவைத்திருந்த 12 சவரன் தங்க நகைகள், 1.5 லட்சம் ரூபாய் ஆகியவை தீக்கிரையானதாகவும் கூறி பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

மேலும், தங்களது குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

இதையும் படிங்க:கரோனா நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவ ஊழியர் கைது!

ABOUT THE AUTHOR

...view details