தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - பெண் உள்பட மூன்று பேர் கைது!

வேதாரண்யத்தில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து மூன்று பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

பெண் உள்பட மூன்று பேர் கைது
பெண் உள்பட மூன்று பேர் கைது

By

Published : Oct 2, 2020, 8:37 PM IST

நாகப்பட்டினம்: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பெண் உள்பட மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வேதாரண்யத்தில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வரும் தாய்க்கு துணையாக, அவர் வேலைக்கு செல்லாத நாள்களில் வேலைக்குச் சென்ற மகளான 16 வயது சிறுமியிடம், அதே பகுதியைச் சேர்ந்த உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம், அவரது நண்பர்கள் விஜயன், அரவிந்தன் ஆகியோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு அரவிந்தன் மனைவி துர்காதேவி துணையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இதுகுறித்து உணவக உரிமையாளர் சண்முகசுந்தரம் அவருடைய நண்பர்களான விஜயன், அரவிந்தன் அவர் மனைவி துர்கா தேவி ஆகியோர் மீது வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் செய்துள்ளார்.

சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்த வேதாரண்யம் காவலர்கள் விஜயன், அரவிந்தன் அவரது மனைவி துர்காதேவி ஆகிய மூன்று பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள உணவக உரிமையாளர் சண்முகசுந்தரத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வாட்ஸ்அப் துணிக்கடை - பெண்களை ஏமாற்றியவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details