நாகப்பட்டினம் மாவட்டத்தில், சமய மாநாடு சென்று திரும்பிய 11 பேர், அவர்களைச் சார்ந்த 17 பேர், மருத்துவர் ஒருவர் உள்பட 29 பேருக்கு நேற்றுவரை கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, சமய மாநாடு சென்று திரும்பியவர்களின் உறவினர் ஒருவருக்கும், காரையூர் ஊராட்சி விற்குடி கிராமத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவனுக்கும் கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.
நாகையில் பள்ளி மாணவன் உள்பட 31 பேருக்கு கரோனா உறுதி! - corona updates
நாகப்பட்டினம்: ஒன்பதாம் வகுப்பு மாணவன் உள்பட 31 பேருக்கு கரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாகையில் பள்ளி மாணவன் உள்பட 31 பேருக்கு கரோனா உறுதி!
விற்குடி கிராமத்தில் சுகாதாரத் துறை, காவல் துறையினர் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அம்மாணவனுக்கு நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனையில், குடல்வால்வு அறுவை சிகிச்சை செய்து பத்து நாள்களான நிலையில், சிகிச்சையளித்த மருத்துவர்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா தடுப்புப் பணி: காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு