தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தின விழாவையொட்டி கே.ராமசாமியின் உருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது, "மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்த மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான். கிராமப்புறத்தில் பயிலும் மாணவர்கள் இந்த இடஓதுக்கீடு மூலமாக பயனடைவார்கள்.
நீட் ஒரு புறம் பாதிப்பாக இருந்தாலும், தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கல்லூரி கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் அதிகளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவர்களாக உருவாக வழிவகை செய்யப்படும்" என்றார்.
வேதாந்தா இல்லம் நினைவு இல்லமாக மாறும் அப்போது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லம் நினைவில்லமாக்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற்றுவதில் எந்த தடையும் ஏற்படாது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவு எந்தவிதமான எதிர்ப்பு இல்லாமல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 5560 பேருக்கு கரோனா தொற்று உறுதி!