மயிலாடுதுறை: சீர்காழியில் 108 திவ்ய தேசங்களில் 28-வது திவ்ய தேசமான தாடாளன் பெருமாள் என்னும் திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. மூலவர் பெருமாள், தனது இடது பாதத்தை வான் நோக்கி தூக்கி உலகளந்த பெருமாளாகக் காட்சி தருகிறார். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியதன் ஒரு முக்கிய நிகழ்வாக, தெப்ப திருவிழா நேற்று (ஜூன்13) நடைபெற்றது.
16 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா - 108 திவ்ய தேசங்கள்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிக்ரம நாராயணப்பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவின் ஒரு பகுதியாக 16 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப திருவிழா நடைபெற்றது.
முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, புஷ்ப அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் லோகநாயகி தாயருடன் பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி ஐந்துமுறை சுற்றிவந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பல்வேறு காரணங்களால் கடந்த 16 ஆண்டுகளாக தடைபட்டிருந்த இந்த தெப்ப திருவிழா இந்த ஆண்டு நடைபெற்றதால் இதனை காண ஏராளமான பக்தர்கள் அங்கு திரண்டனர்.
இதையும் படிங்க: தர்மபுரி தேர் விபத்து சம்பவத்தில் நடந்தது என்ன ? நெஞ்சை பதற வைக்கும் திக் திக் நிமிடங்கள்...