மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் உள்ள கீழப்பெரம்பூர் சித்தி விநாயகர் தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(62). இவர் தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்தார். அதன்பின் 2007ஆம் ஆண்டு செம்பனார்கோவில் பகுதியை சேர்ந்த ஜெயினா பீவி (45) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் பணியாற்றினார். கடந்தாண்டு நாடு திரும்பி மனைவியுடன் வசித்துவந்தார்.
மயிலாடுதுறையில் மனைவியை அரிவாளால் தாக்கிய கணவன் தற்கொலை - Mayiladuthurai Government Hospital
குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அரிவாளால் தாக்கிய கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அப்போது இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில் நேற்று ஏற்பட்ட தகராறில் அறிவழகன், ஜெயினா பீவியை அரிவாளால் தாக்கியுள்ளார். அதன்பி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையறிந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயங்கருடன் கிடந்த ஜெயினா பீவியை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அறிவழகனின் உடலை மீட்டனர்.
இதையும் படிங்க: மரண தண்டனை கொடுங்க... தும்கா சிறுமியின் இறுதி வாக்குமூலம்...