தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்டா மாவட்டத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து அரசு மறு கணக்கெடுப்பு செய்ய கோரிக்கை - டெல்டாவில் மாவட்டத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு

மயிலாடுதுறை: டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தொடர் மழையால் பாதிப்படைந்துள்ள நிலையில், அதற்கான சேதத்தை மறு கணக்கெடுப்பு செய்து அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

நெற்பயிர்கள்
நெற்பயிர்கள்

By

Published : Jan 7, 2021, 10:13 PM IST

Updated : Jan 7, 2021, 10:30 PM IST

டெல்டா மாவட்டத்தில் அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள் தொடர் மழையால்நூறு விழுக்காடு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு மறு கணக்கெடுப்பு செய்ய பி.ஆர் பாண்டியன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

டெல்டாவில் தொடர் மழையால் காரணமாக அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா ஆச்சாள்புரம், அழகிய தில்லைநத்தம், ஆலாலசுந்தரம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களைப் பார்வையிடவந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்பொழுது பேசுகையில், "காவிரி டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஏற்கனவே நிவர், புரெவி புயல் தாக்குதலால் 6 லட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசு அறிவிப்பு விடுத்து இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டுவருகிறது.

டெல்டா மாவட்டத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு

இந்நிலையில் தற்போது பருவம் மாறி பெய்துவரும் பேய் மழையால் ஒட்டுமொத்த விவசாயமும் அழிந்துவிட்டது. அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் முற்றிலும் நாசமாகிவிட்டது.

காய் முற்றிய நிலையில் அனைத்துப் பயிர்களும் சாய்ந்து ஒரு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து அழுகத் தொடங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கிராமப்புறங்களில் நோய்த்தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

டெல்டாவில் மாவட்டத்தில் நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து அரசு மறு கணக்கெடுப்பு செய்ய வேண்டும்

எனவே இந்தப் பாதிக்கப்பட்ட பயிர்களைத் தமிழ்நாடு அரசு இடுபொருள்களுக்கான இழப்பீடு என்கின்ற அடிப்படையில் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் அறிவித்து 40 விழுக்காடு பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கீடு செய்யப்பட்டுவருகிறது.

இது முற்றிலும் தவறானது. தற்பொழுது பெய்துள்ள மழையால் 100 விழுக்காடு விவசாய விளைநிலம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது அறிவித்துள்ள இடுபொருளுக்கான இழப்பீட்டை உடனடியாக கொடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நிலங்களை மறு கணக்கீடு செய்ய வேண்டும். பொங்கல் வரையில் மழை பெய்யும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொங்கலுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து முழு கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "தற்போது அறிவித்துள்ள இடுபொருளுக்கான நிவாரணத்தொகை விவசாயிகளைப் பாதுகாக்காது, பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளார்கள். அனைத்து விவசாயிகளுக்கும் 100 விழுக்காடு காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மறு கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என பி.ஆர் பாண்டியன் கோரிக்கை

சராசரி மழையைவிட கூடுதல் மழை பெய்துள்ள பகுதிகளில் அறுவடை ஆய்வறிக்கை என்ற பெயரில் ஏமாற்ற முயற்சிக்கக் கூடாது. சராசரி மழை அளவைக் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தை ஆய்வுசெய்து அனைத்து விவசாயிகளுக்கும் முழு காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு - உயர் நீதிமன்றத்தில் தகவல்

Last Updated : Jan 7, 2021, 10:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details