நாம் சாப்பிடும் உணவே நஞ்சாக மாறி நாளுக்கு நாள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். நாம் உண்ணும் உணவு இயற்கை உரங்களால் உருவாக்கி இயற்கை உணவுகளை உண்ண வேண்டும் என மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு செய்து மரணமடைந்தார். அவரின் வழிகாட்டுதல்படி நெல் ஜெயராமன் ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்திவந்தார்.
5ஆவது நெல் திருவிழா கோலாகல தொடக்கம்.. - sirkali
நாகை: சீர்காழியில் 5ஆவது நெல் திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், கடந்த வருடம் நெல் ஜெயராமன் புற்றுநோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து இந்த ஆண்டு நாகை மாவட்டம் சீர்காழியில் 5ஆவது நெல் திருவிழா தொடங்கியது.
இந்த விழாவில் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் புகைப்படங்களை தாங்கி விவசாயிகள் உள்ளிட்டோர் இசை வாத்தியங்கள் முழங்க கொள்ளிட மூக்கூட்டில் ஊர்வலமாக வந்தனர். முன்னதாக பாரம்பரிய விவசாயத்திற்கு பயன்படுத்தும் அனைத்து இடு பொருட்களும், பாரம்பரிய நெல் விதைகள், அரிசி வகைகள் காண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.நெல் திருவிழாவில் கலந்துகொண்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு கம்மங்கூழ், கேழ்வரகு கூழ், மூலிகை சுக்கு காப்பி உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இவ்விழாவில், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், வெளிமாநில விவசாயிகள் பங்கேற்றனர்.