தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாகையில் கடல் மார்க்கமாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள்

நாகை: நாகையில் ரெட் ரேஞ்சு உயர்ரக வெடிகுண்டுகளுடன் கடல் மார்க்கமாக ஊடுருவ முயன்ற 6 தீவிரவாதிகளை, சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகையின் போது பாதுகாப்பு படையினர் பிடித்தனர்.

தீவிரவாதிகள்

By

Published : Jul 18, 2019, 1:08 PM IST

நாடு முழுவதும் கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கடலோரப் பாதுகாப்புப் படையினர், கடற்படை போலீஸார் ஒருங்கிணைந்து, ஆண்டுதோறும் தீவிரவாத ஊடுருவல் தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதன்படி, கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் சாகர் கவாஜ் பாதுகாப்பு ஒத்திகை இன்று நாகையில் நடைபெற்றது.

நாகையில் தீவிரவாதிகள்
நாகை மாவட்டத்தில் உள்ள 54 கடலோர கிராமங்கள் மற்றும் 16 இடங்களில் இந்த தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நாகூரில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில், போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடல்மார்க்கமாகச் சென்று நாகை பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம், வேளாங்கண்ணியில் உள்ள தங்கும் விடுதியைத் தகர்க்க திட்டமிட்டிருந்த 6 தீவிரவாதிகளை கமாண்டோ படை வீரர்களும், ரோந்து போலீஸாரும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பிடிபட்ட அவர்களிடம் இருந்து ரெட் ரேஞ் என்ற அதிவேகமாக வெடிக்கும் வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் நாகை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details