நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகேயுள்ள பிரசித்திப் பெற்ற எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெளர்ணமி பெருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி நடப்பாண்டுக்கான சித்ரா பெளர்ணமி திருவிழா ஏப்ரல் 28ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி மே 6ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், தற்பொழுது கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் அரசின் உத்தரவை ஏற்று இந்தாண்டு நடைபெறவிருந்த சித்ரா பௌர்ணமியின் முக்கிய திருவிழாவான திருத்தேரோட்டம் உள்ளிட்ட அனைத்தும் ரத்துசெய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் மேலும் சுப்பிரமணிய சுவாமிக்கு நித்திய கால பூஜை வழக்கம்போல் நடைபெறும் ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.