நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், குரங்குபுத்தூர் கிராமத்தில் காவிரிக்கரை ஓரத்தில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. நேற்று முன் தினம் இரவு(ஜூலை 9) வழக்கம்போல் 8 மணிக்கு கடையைப் பூட்டிவிட்டு மேற்பார்வையாளர் சிவசுப்பிரமணியன், விற்பனையாளர்கள் சென்றுள்ளனர்.
மறுநாள் காலை டாஸ்மாக் கடையின் பூட்டு உடைந்திருப்பதை பார்த்தவர்கள் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர், டாஸ்மாக் கடை ஊழியர்கள் சென்று பார்த்தபோது, 18 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 2.40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர் ரக மதுபாட்டில்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.